fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவிற்கு, முதல்வர் முனைவர் என்.ஆர்.அலமேலு வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக​ அறங்காவலர் டி.லட்சுமி நாரயண​சுவாமி, துணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை தாங்கினர்.
முதலாம் நாள் விழாவிற்கு கோவை, கேமரூன் ஸ்க்லம்பெர்கரின் தகவல் தொழில்நுட்ப மையத் தலைவர் ரவிச் சந்திரன் துரைராஜன் பேசும்போது, வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை திறம்பட தொடங்க வேண்டும்.

இளம் கற்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பாகச் செயல்படுவதற்கும், நல்ல வேலைகளைப் பெறுவதற்கும் பட்டப்படிப்பினை ஒரு வழியாகக் கருதாமல், அறிவைப் பெறுவதற்கும், மனிதர்களாக முன்னேறுவதற்கும் ஒரு போர்ட்டலாகப் பார்க்க வேண்டும் என்றார்.

இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு, பெங்களூரு கேப்ஜெமினி நிறுவனத்தின் பொறியியல் துறை துணைத் தலைவர் சுமித்ரா ரங்கநாதன் பேசுகையில், பொறியியல் மற்றும் தொழில் நுட்பத் துறையைப் பற்றிய நுட்பமான தரவு புள்ளிகளை கேப்ஜெமினியின் விளக்கக் காட்சியுடன் பகிர்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

இக்கல்லூரியில் 1998 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களான இன்டெல் மென்பொருள் பொறியியல் இயக்குநர் பாலசந்தர், சென்னை, கிளவுட் பிரிங்க் நிறுவனத்தின் மூத்த முதன்மை பொறியாளர் மகேஷ் சிங் , சென்னை, ட்ராக்டர்ஸ் அண்ட் பார்ம் எக்கியூப் மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையின் உதவி தலைமை பொறியாளர் தங்கமலர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருட பட்டப்படிப்பை திறம்பட எதிர்கொள்ள வேண்டும், பல்வேறு நிறுவனங்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது என்பதனை தெரிவித்தனர்.

முனைவர் உதயராணி ,முனைவர் ரகுநாத் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img