Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு கொங்குமண்டலத்தின் சிறந்த கல்லூரிக்கான விருது

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு கொங்குமண்டலத்தின் சிறந்த கல்லூரிக்கான விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொங்கு மண்டலத்தின் 2022ம் ஆண்டின் சிறந்த கல்லூரியாகத் தேர்வாகியுள் ளது.
நியூஸ் 18 தொலைக்காட்சி தமி ழகத்தின் தலை சிறந்த கல்லூரி களுக்கு ஆண்டுதோறும் கற்றல் விருதினை வழங்கி வருகிறது.

இவ்வாண்டு சிறந்த கற்றல், புதிய கண்டுபிடிப்பு, சமூகப் பங்களிப்பு, படைப்பாற்றல் என்று பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கொங்கு மண்டலத்தின் சிறந்த கல்லூரியாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி தேர்வாகி “கற்றல்” விருதினை பெற்றுள்ளது.

இக் கல்லூரி கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமியின் சீரிய வழி காட்டுதலோடு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமாரின் ஆக்கப்பூர்வமான தலைமையில், முன்னணி கல்லூ ரியாகத் திகழ்ந்து வருகிறது.

ஏற் கனவே சென்ற ஆண்டு நியூஸ் 18 தொலைக்காட்சியின் புதுமை கண் டுபிடிப்புக்கான விருதினையும் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வி மற்றும் சமூகப் பணிக்காக பல்வேறு விருதுகளையும் இக்கல்லூரி குவித்துள்ளது.

கல்லூரியின் இந்த வெற்றிப் பயணத்தில் நியூஸ் 18 கற்றல் விருது மேலும் ஒரு மைல்கல்லாக அமைந் துள்ளது. சென்னையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில், கல்லூரியின் சார்பாக இயற் பியல் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பூங்குழலி, பேராசிரியர் முனை வர் எஸ். பிரகதீஸ்வரன் ஆகியோர் விரு தினைப் பெற்றுக் கொண்டனர்.

மாநில அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இவ்விருதை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img