Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை கல்லூரி இங்கிலாந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்&வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புக்கு வழிவகுக்கும்

ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை கல்லூரி இங்கிலாந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்&வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புக்கு வழிவகுக்கும்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஎஸ்டிசி ப்ராஜெக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவ னத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட் டளையின் சார்பில் நிர்வாக அறங் காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி மற்றும் ஐஎஸ்டிசி ப்ராஜெக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறு வனக் கல்விப் பிரிவின் தலைவர் மகேஷ் சத்யன் இருவரும் இந்த ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்க ளது கல்லூரி மாணவிகள் வெளிநாடு களில் உள்ள கல்வி நிறுவனங்களில் குறுகிய காலப் பயிற்சிகள், மேற்கல்வி, பரிமாற்றச் செயல்திட்டங்கள் மற்றும் ஆய்வுப் பணிகளில் இணைந்து செயல்பட முடியும்.

மகளிர் கல்வியை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லவும் பெண்கள் உலகளாவிய அறிவும் அனுபவமும் பெற்று ஆளுமை மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img