fbpx
Homeபிற செய்திகள்மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்: பல்கலைக்கழக பதிவாளர் பேச்சு

மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்: பல்கலைக்கழக பதிவாளர் பேச்சு

பொறியியல் பட்டம் பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை நம்பி காத்திருக்காமல் தொழில் முனைவோர்களாக மாற முயல வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். ஜி. ரவிக்குமார் கேட்டுக்கொண்டார்.

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா மே 22ம் தேதி நடந்தது. அதில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜி.ரவிக்குமார், 739 இளநிலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதன் பின்னர். அவர் பேசியதாவது:
வாழ்க்கையில் நாம் முன்னேற குறுகிய கால திட்டம் ( பிளான்), நீண்ட கால திட்டம் என இரண்டு விதமான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றியைப் பெற குறுகிய கால திட்டத்தை விட நீண்ட கால திட்டத்தை தான் முக்கியமாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும். அப்போது தான் நாம் வாழ்க்கையில் நினைக்கும் இடத்தை அடைய முடியும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் இருந்தன ஆண்டொன்றுக்கு 3000 பட்டதாரிகள் வெளிவந்தனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத் தின் கீழ் தற்போது 531 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சம் மாணவர்கள் வெளி வருகின்றனர். இதைத் தவிர கலை அறிவியல் கல்லூரிகள் மூலம் ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் வெளி வருகின்றனர். தமிழக அரசின் கடன் ரூபாய் 20 ஆயிரம் கோடியிலிருந்து 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறார்கள் வரவு ஒரு லட்சம் கோடி ஆகும். எனவே, அரசு அனைவருக்கும் வேலை வழங்குவது இயலாது.
இதே போன்று தனியார் துறையிலும் வேலை வழங்குவது சிரமம். மேற்கத்திய நாடுகளில் ஐடி துறை வளர்ச்சி அடைந்ததால் பலருக்கு வேலை கிடைக்கிறது.

எனவே, பொறியியல் பட்டதாரிகள் தொழில் முனைவோர்களாக வேண்டும். இதனால் அவர்கள் ஒவ்வொருவரும் பத்து அல்லது பதினைந்து பேருக்கு வேலை தர முடி யும் இதற்காக மத்திய மாநில அரசு திட்டங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவர்கள் தங்களைச் சுற்றி உள்ள மக்களுக்கும் நன்மை செய்ய முடியும் வெளிநாட்டு வேலை கனவு இயல்பானது தான். இருந்த போதிலும் வெளிநாட்டுடன் ஒப்பிடுகையில் நம்நாடு இயற்கை வளத்திற்கு குறைந்ததல்ல எனவே இங்கிருந்து நீங்கள் சாதிக்க முடியும். பட்டம் பெறும் மாணவர்கள் 30, 40, 50 வயதுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். அதை அடைய உழைக்க வேண்டும்.

தங்களை சுற்றி உள்ளவர்களிடம் மனிதாபிமானத்துடன் பழகி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி தாளாளர் எஸ். டி. சந்திரசேகர், தலைவர் கந்தசாமி, பொருளாளர் ப.அருண், அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், குலசேகரன், நல்லசாமி, முதல்வர் டாக்டர் .எம். ஜெயராமன், நிர்வாக மேலாளர் என்.பெரியசாமி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img