Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி உடன் பூட்லேப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி உடன் பூட்லேப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, பெங்களூரு பூட்லேப் நிறுவனத்துடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூட்லேப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் சாம்பசிவன், எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயண சுவாமி ஆகியோர் கையொப்பமிட்டனர்.

கல்லூரி துணை முதல்வர் முனைவர் கருப்புசாமி வரவேற்றார்.
பூட்லேப் நிறுவனமானது, வாகன வங்கி நிதிச் சேவைகள், காப்பீடு மற்றும் சில்லறை வணிகம், இ-காமர்ஸ் உட்பட பல்வேறு தொழில்களில் மிகப் பெரிய டிஜிட்டல் தளங்களை கொண்டு தேவ் ஏப்ஸ் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் இக்காலத்திற்கேற்ப வெற்றிகரமாக மாற்றி அமைத்துள்ளது.

இக்கல்லூரியின், சிறப்பு பாடத்திட்டங்களில் வளர்ந்துவரும் களங்களான சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ஆக்குமெண்டெட் மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி, ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், சென்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனம் ஆகியவற்றை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வல்லுநர்கள் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி மாண வர்கள் தேவ் ஏப்ஸ் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெறவும், கல்லூரி பேராசிரியர்கள் கன்சல்டன்சி அசைன்மென்ட்ஸ் பெற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கிறது.

மேற்கூறிய களங்களில், சிறந்த கண்டு பிடிப்புகளை உருவாக்கி, அதன்மூலம் சிறப்பு சான்றிதழ்கள் மாணவர்கள் பெற இந்த தொழில் சார்ந்த இணைப்பு உறு துணையாக இருக்கும்.

பூட்லேப் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையைச் சேர்ந்த சேர்ந்த இனியன் கதிர்வேல், மோகன்லால் செல்வராஜ், ஹரிதா ஆகியோர் அனுபவ ங்களை பகிர்ந்து கொண்டனர்.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் துறைத்தலைவர் முனைவர் ஜெகதீஸ்வரி, முனைவர் ஜெயந்தி ஆகியோர் கல்லூரியின் ஆராய்ச்சி மற் றும் புதுமை கண்டுபிடிப்புகளின் மை யத்தின் துணையுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img