fbpx
Homeபிற செய்திகள்ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா-தேச பக்தி பாடல்கள் பாடி அசத்தல்

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா-தேச பக்தி பாடல்கள் பாடி அசத்தல்

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை பள்ளியின் தாளாளர் ஆர்,ஜே.பிலிப் பவுலர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடக்க வழிபாட்டினை மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவி சுஜிஷேரன் நிகழ்த்தினார்-. தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர். அணிவகுப்பு மரியாதை யை ஏற்று தாளாளர் சிறப்புரை ஆற்றினார்.

ஆங்கிலோ இந்தியன் பள்ளி இசைக்குழுவைச் சேர்ந்த மாணவர்கள் தேசப்பாடல்களை பாடி இசைவிருந்து அளித்தனர். வந்தே மாதரம், நான் பிறந்த பொன்னாடு எனத் தொடங்கும் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

சுதந்திர போராட்டப் பயணம் என்ற தலைப்பில் ஸ்டேன்ஸ் ஐ,சி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நாடகமும் ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் நடனமும் சிறப்பாக இருந்தது.

விழாவினை பள்ளிகளின் முதல்வர்களும் துணை முதல்வர்களும், உதவித் தலைமை ஆசிரியர்களும் ஒருங்கிணைத்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img