தைவான் எக்ஸலன்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தனித்துவமான ‘ஷேரிங் இஸ் கேரிங்’ பிரச்சாரம், மூன்று வெற்றியாளர்களுடன் கடந்த 26-ம் தேதி முடிவடைந்தது.
பல்வேறு வகையான போட்டிகளில் கலந்துகொண்ட இந்த வெற்றியாளர்களின் செயல்பாடு நடுவர்களை அதிகம் கவர்ந்தது.
சமூக மாற்றத்தை விரைவுபடுத்த உதவும் இந்த உலகளாவிய பிரச்சாரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று ஆன்லைனில் தொடங்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள், சமூக நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றோர், சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வரக்கூடிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இந்த பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த ‘ஷேரிங் இஸ் கேரிங்’ என்ற பிரச்சாரம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. முழுமையான வளர்ச்சி, சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் 61 நாடுகளின் 781 சிறப்புமிக்க பிரதிநிதிகளின் உரையுடன், பிரச்சாரம் நடைபெற்றது.
பன்னாட்டு வர்த்தக அமைப்பு (BOFT), தைவான் வெளி வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் (TAITRA) ஆகியன இணைந்து கடந்த 6 முதல் 23-ம் தேதி வரை ஆன்லைன் பிரச்சார நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. உலகளாவிய அளவில் 115 நாடுகளில் இருந்து 20,000 வாக்குகளை ஈர்த்தது.
பிலிப்பைன்ஸில் இருந்து மொபைல் கார்ட் திட்டம் மூலம் சமூகத்தில் கல்வியறிவித்தல், மேம்படுத்துதல், நியூசிலாந்தின் பழங்குடி மவோரி சமூகங்களுக்கான சோலார் தீர்வுகள், ஒரு நாள் மருத்துவ சுற்றுப்பயணம் மற்றும் தைவானில் இருந்து ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கான டெலிவரி தீர்வுகள் மொபைல் டிஜிட்டல் கிளினிக் வாய்வழி சுகாதார சேவை திட்டம் ஆகிய தலைப்புகளில் இருந்து முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொருவரும் தலா 10,000 அமெரிக்க டாலர்களை திட்ட நிதியாகவும் பெற்றுள்ளனர்.
தைவான் எக்ஸலன்ஸ் அமைப்பு வெற்றி பெற்ற இந்த மூன்று வெற்றியாளர்களை அவர்களது முன்மொழிவுகளை செயல்படுத்த உதவுவதோடு, வெளிநாட்டு சமூகங்களின் மேம்பாடு மற்றும் மேம்பாட்டிற்கு சீரிய பங்களிக்கிறது.



