ஷுஜூ (ISUZU) மோட்டார்ஸ் இந்தியா முழுவதும் குளிர்கால சேவை முகாம் களை வரும் 24-ம் தேதி வரை நடத்துகிறது.
சிறந்த சேவை மற்றும் உரிமை அனுபவத்தை வழங்குவதற்கான ISUZUஇன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக, Isuzu மோட்டார்ஸ் இந்தியா தனது ISUZU D-MAX பிக்-அப்கள் மற்றும் SUVகள் வரம்பிற்கு நாடு தழுவிய ISUZU I- Care குளிர்கால சேவை முகாம்களை நடத்துகிறது.
‘ISUZU Care’ முன்முயற்சியின் கீழ், வரும் 24-ம் தேதி வரை அனைத்து ISUZU அங்கீகரிக்கப்பட்ட டீலர் சேவை நிலையங்களிலும் குளிர்கால சேவை முகாம்கள் நடத்தப்படும்.
இந்த காலகட்டத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்களையும் பெறலாம். முகாமுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் பின்வருவனவற்றைப் பெறுவார்கள்:
இலவச 37-அம் சங்களைக் கொண்ட விரிவான சோதனை, இலவச டாப் வாஷ், லேபர் கட்டணத்தில் 10% தள் ளுபடி, உதிரிபாகங்களில் 7% தள்ளுபடி, லூப்ஸ் மற்றும் திரவங்களுக்கு 7% தள்ளுபடி, ஃபியூமி கேஷனில் ரூ.100/- தள்ளுபடி.
அகமதாபாத், அனந்த பூர், பெங்களூரு, பீமாவரம், புஜ், கோழிக்கோடு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, திமாபூர், காந்திதாம், கோரக்பூர், குருகிராம் குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், ஜலந்தர், ஜோத்பூர், கொச்சி, கொல்கத்தா, கர்னூல், லக் னோ, மதுரை, மங்களூரு, மெஹ்சானா, மொஹாலி, மும்பை, நாக்பூர், நெல் லூர், நொய்டா, புனே, ராய்ப்பூர், ராஜமுந்திரி, ராஜ்கோட், சிலிகுரி, சூரத், திருப்பதி, திருவனந்தபுரம், வதோதரா, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளISUZUஇன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சேவை அமைவிடங்களிலும் குளிர் கால சேவை முகாம் நடத்தப்படும்.
வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ISUZU டீலர் அவுட்லெட்டை அழைக்கலாம் அல்லது சேவை முன்பதிவுக்கு லீttஜீs://வீsuக்ஷ்u.வீஸீ/sமீக்ஷீஸ்வீநீமீ-தீஷீஷீளீவீஸீரீ/ ஐ பார்க்கலாம்.
மேலும் தகவலுக்கு வாடிக்கையாளர்கள் 1800 4199 188 (கட்டணமில்லா) என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
முகாம்கள், சிரம மில்லாத ஓட்டுநர் அனுபவத்திற்கான சிறந்த பலன்கள் மற்றும் முன் தடுப்புப் பராமரிப்புச் சோதனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொ ண்டுள்ளது.



