கோவை மாவட்ட ஆட் சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் வாலாங்குளம் முதல் பழைய சுங்கம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் சந்திப்பு, ரவுண்டானா பகுதிகளிலும் அவர்கள் நேற்று (நவ.10) ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சி வார்டு எண் 73, 67, 68, 69 ஆகிய பகுதிகளில் திருச்சி சாலையில் அமைந்துள்ள மழை நீர் வடிகாலில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் போது, வாய்க்காலில் போதிய அளவு இடம் இல்லாததால், வெள்ள நீர் சாலையில் வழிந்தோடுகிறது.
தற்போது இரவு பகல் பார்க்காமல் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், மாநகராட்சி பகுதியில் வெள்ள நீரை நஞ்சுண்டாபுரம் சாலை வழியாக நொய்யல் ஆற்றை தொடுவதற்கு ஏதுவாக ராமநாதபுரம் சந்திப்பில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைத்து இணைப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
தற்போது ராமநாதபுரம் சிக்னலில் இருந்து கிழக்கு நோக்கி சங்கனூர் பள்ளம் வரை எந்த வெள்ளநீரும் நிரைந்து ஓடாமல் மழைநீர் வடிகாலில் செல்ல ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடை யூறு இல்லாதவாறு தொ டர்ந்து போலீஸ் கந்தசாமி சந்திப்பில் இருந்து ராமநாதபுரம் சிக்னல் வரை வெளிவரும் வெள்ளநீரை அப்புறப் படுத்தும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, உதவி ஆட்சியர் பயிற்சி சரண்யா, மாநகர காவல் துணை ஆணையர்கள் ஜெயச்சந் திரன், உமா, மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர் ஆர்.சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் கமலக் கண்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.



