Homeபிற செய்திகள்ரூ.50 லட்சம் கேஎம்சிஹெச் நிதி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

ரூ.50 லட்சம் கேஎம்சிஹெச் நிதி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் 62, கோயமுத்தூர் மெட்ரோபாலிடன் லே டீஸ் சர்க்கிள் 23 ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, ‘ஃபிரீடம் த்ரூ எஜூகேஷன்’ என்ற திட் டத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருகின்றன.

அதன்படி கோவை வடமதுரை பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட் டன. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் 90 முதல் 100 மாணவர்கள் பயன்பெறுவர்.

கட்டிடத்திற்கான பூமி பூஜை இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான மொத்த செலவு ரூ.50 இலட் சமாகும். மொத்த செல வையும் கேஎம்சிஹெச் மருத்துவமனை ஏற்றுக் கொண்டுள்ளது.

கேஎம்சிஹெச் மருத்து வமனை பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து நடத்தி வருகிறது. கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத் துவதுடன், சமூக நல மேம்பாட்டு திட்டங்களுக்கு கேஎம்சிஹெச் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வரு கிறது.

புதிய பள்ளிக் கட்டிடம் திறப்புவிழா இன்று (ஜூன் 16) நடைபெற்றது.
கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, ஐந்து வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.

கோய முத்தூர் மெட்ரோபாலிடன் ரவுண்ட் டேபிள் 62 தலைவர் சூர்ய நாராயண மூர்த்தி, கோயமுத்தூர் மெட்ரோபாலிடன் லேடீஸ் சர்க்கிள் தலைவர் மீனாஷி மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோயமுத்தூர் மெட் ரோபாலிடன் லேடீஸ் சர்க்கிள் 23 என்பது சமூக சேவை மற்றும் சர்வதேச நல்லுறவு ஆகிய இலட்சியங்களை கொண்டுள்ள இளம் சாதனையாளர்கள் கொண்ட அமைப்பாகும். இது லேடீஸ் சர்க்கிள் இண்டர்நேஷனல் மற் றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியாவின் ஓர் அங்கமாக செயல்படுகிறது.

கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் 62 என்பது சர் வதேச ரவுண்ட் டேபிள் மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். ‘ஃபிரீடம் த்ரூ எஜூகேஷன்’ என்ற தேசிய அளவிலான திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வகுப்பறைகள் கட்டுவதற்காக நூறு கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது என்று இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img