தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 136 படுக்கை வசதியுடன் கூடிய ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தடுப்பு சிகிச்சைப் பிரிவினை நேரில் பார்வையிட்டார்.
உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.



