fbpx
Homeபிற செய்திகள்ரத்தினம் குழுமம் -எஸ்.எஸ்.டி. குளோபல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

ரத்தினம் குழுமம் -எஸ்.எஸ்.டி. குளோபல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இரத்தினம் குழும நிறுவனங்கள் மற்றும் கோவையில் உள்ள எஸ்.எஸ்.டி. குளோபல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜப் பானியமொழிகற்றுக்கொள்ளஎல் 5 நிலையில், 80 மணிநேர பயிற்சிக்குப்பின்தேர்ச்சிபெறுபவர்களுக்குசான்றிதழ்வழங்கப்படும்.

ஜப்பானிய மொழியை 24000 மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்று வருகின்றனர். இந்திய மாணவர் களுக்கு இயந்திர கட்டுமானம், மின்னணுவியல், மேலும் 12 துறை கள் சார்ந்த வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

ஜப்பானில் உயர்கல்வி பெறுவதற்கான வழி முறைகள், வேலைவாய்ப்புகள் பெறு வதற்கான வழிமுறைகள், இந்தோ ஜப்பான் இணைந்து நடத்தும் ஹேக்கத்தான்ஸ், இந்தோ ஜப்பான் கூட்டு நடவடிக்கைகள், நம் நிறுவன மாணவர்கள் ஜப்பானிலும், ஜப்பான் மாணவர்கள் நம் நிறுவனத்திலும் கல்வி பயிலவும், ஜாப்பனீஸ் மொழி மற்றும் கலாசாரத்தினை கற்றுக் கொள்ள வழிவகை செய்வதற்காக நம் நிறுவனத்தில் ஒரு கிளப்பாக செயல்பட உள்ளது.

இந்த புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜப்பான் பேராசிரியர்களுடன் இணைந்து ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். முரளிதரன், ஆராய்ச்சித்துறை புல முதன்மையர் டாக்டர் கே. பி.வி.சபரீஷ், வணிகவியல் துறை புல முதன்மையர் டாக்டர் தி.மா.ஹேம லதா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் ஆர். ஹரிஹரன், எஸ்.எஸ்.டி. குளோபல் மேலாளர் கல்வி சார் ஒத்துழைப்பு பிரனீத் பாலசுப்பிரமணியம், தலை மை ஆலோசகர் டாக்டர் ராமலதா மாரிமுத்து, ஆலோசகர் நவனீத் கிருஷ்ணன், ஆலோசகர் ராமநாதன், ஜப்பானிய பிளஸ் மக்கள் தொடர்பு மேலாளர் வாஞ்சிநாதன் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் கையெ ழுத்தானது.

படிக்க வேண்டும்

spot_img