fbpx
Homeபிற செய்திகள்யுஐடியில் குடியரசு தின விழா

யுஐடியில் குடியரசு தின விழா

கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் சுஜாதா கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பில், தேசிய இளைஞர் தின விழாவையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஜீ. தாமரைச்செல்வி, குன்னூர் ஆக்ஸ்போர்ட் கான்டினென்டல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி கே.அகர்ஷன, மேலூர் ஓசாட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஆர்.வெண்ணிலா, கோவை தம்பு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ஜெ.சௌந்தர்யா, கிரசெண்ட் காஸ்டல் பப்ளிக் பள்ளி காவியஸ்ரீ ஆகியோர் பரிசு பெற்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில், ஈரோடு ஜே.கே.கே.முனிராஜ் கல்லூரி இறுதியாண்டு மாணவர் ஆர்.பாலாஜி, கோவை, யுனைடெட் கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் ஏ.தவராஜ், பெரம்பலூர் அன்னை ஆயிஷா கலை அறிவியல் கல்லூரி ஆஸ்மா பானு, கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி மாணவி ஸ்ரீமதி ஆகியோர் பரிசு பெற்றனர்.

விழாவையொட்டி, கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு இடையே இறகுப் பந்து போட்டி நடத்தப்பட்டது.

ஆண்கள் பிரிவில் யுஐடி உதவிப் பேராசிரியர் சுனில், யுஐடி கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் அருண் பிரசாத், பெண்கள் பிரிவில் யுனைடெட் பப்ளிக் பள்ளி ஆசிரியர் கார்த்திகா, யுனைடெட் கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர் சொப்னா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img