fbpx
Homeபிற செய்திகள்முன்கூட்டியே ஏற்றப்பட்ட பாடல்களுடன் சரிகம முதல் கீபேட் போன் அறிமுகம்

முன்கூட்டியே ஏற்றப்பட்ட பாடல்களுடன் சரிகம முதல் கீபேட் போன் அறிமுகம்

கார்வானுடன் பல்வேறு தொழில் விதிமுறைகளை கடந்த பிறகு, சரிகம, கார்வான் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயன்பாட்டு அடிப்படையிலான தயாரிப்பு, செயல்பாட்டு தேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், கீபேட் போன் சந்தையில் இதுவரை கேள் விப்படாத முன்கூட்டியே ஏற்றப் பட்ட பாடல்களின் கூடுதல் அம்சத்தையும் வழங்குகிறது.

கார்வான் மொபைல் என்பது முன்கூட்டியே ஏற்றப்பட்ட பாடல்கள், சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள், நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி, டுயல் சிம், எஃப்எம், சக்திவாய்ந்த எல்இடி டார்ச்லைட் மற்றும் பிற அம்சங்களை கொண்ட முதல் கீபேட் மொபைலாகும்.

கார்வான் தனது பயனா ளிகளுக்கு முன் கூட்டியே ஏற்றப்பட்ட பாடல்களுடன் மெல்லிசை கேட்கும் அனுப வத்தை மீட்டெடுத்தது போல், பயணத்தின்போதும் அதையே கார்வான் மொபைல் செய்ய விரும்புகிறது.

எல்லா மொபைல்க ளையும் போல் பயனாளிகளுக்கு கீபேட் போன் அனுபவத்தை இன்னும் உறுதிசெய்யும். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, கிஷோர் குமார், முகமது ரஃபி உள்ளிட்டவர்களின் மகிழ்ச்சி, சோகம் போன்ற மனநிலைகளில் கேட்கக்கூடிய பாடல்களை தேர்ந்தெடுத்து ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படை யில் உள்ளன. பாடல்களை கேட்க இண்டர்நெட் தேவையில்லை.

விளம்பர இடைவேளைகளும் இல்லை. முன்கூட்டியே ஏற்றப் பட்ட 1500 இந்தி பாடல்கள் தவிர, வயர்லெஸ் எஃப்எம், டிஜிட்டல் கேமரா, எல்இடி டார்ச்லைட், ஆக்ஸ் அவுட், பல மொழி சப் போர்ட், வாய்ஸ் ரெக்கார்டிங், கால் ரெக்கார்டிங், டுயல் சிம், 8ஜிபி மெமரி கார்டு 2ஜிபி இலவச இடவசதி போன்ற அம்சங்கள் நிரம்பியுள்ளன.

போனில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் 2500 எம்ஏஎச் பேட்டரி நீண்ட நேரம் பேசக்கூடியதாக உள்ளது. 1 வருட உத்தரவாதம் உண்டு. கார்வான் மொபைல் இரண்டு திரை அளவுகளில் வருகிறது – 2.4 இன்ச் மற்றும் 1.8 இன்ச், விலை முறையே ரூ.2490 மற்றும் ரூ.1990 ஆகும். எமரால்டு க்ரீன், கிளாசிக் பிளாக், ராயல் ப்ளூ ஆகிய மூன்று தரமான வண்ணங்களை தேர்ந்தெடுக்கலாம்.

இது தற்போது இந்தி மற்றும் தமிழில் ரீடெய்ல் மார்க்கெட் மற்றும் saregama.com, amazon & flipkart போன்ற இணையவழி தளங்களிலும் கிடைக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img