fbpx
Homeபிற செய்திகள்மின் கட்டண உயர்வைக் கைவிட கோவை கொடிசியா வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வைக் கைவிட கோவை கொடிசியா வலியுறுத்தல்

கோவை கொடிசியா தலைவர் திருஞானம் தொழில் கூட்டமைப்பு தலைவர்கள் சி.பாலசுப்பிர மணியம், விஜயராகவன், ஜேம்ஸ், விக்னேஷ் ஆகி யோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-
கோவையில் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் பெரும்பான்மையாக இயங்கிவருகிறது.

மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்றும் 2 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு கொடுத்து உள்ளோம்.

மின்கட்டணம் அதிகமானால் உற்பத்தி செலவு மிகவும் அதிகரிக் கும், பொருட்கள் விலையும் அதிகமாகும். ஏற்றுமதி ஆர்டர்கள் ஏற்கனவே பெற்ற நிறுவனங்கள் அதிக நஷ்டத்தை சந் திக்க நேரிடும்.

எனவே ஒரேயடியாக மின்கட்டணத்தை உயர்த்தினால் தொழில்துறை மிக கடு மையான பாதிப்பை சந்திக்கும். மேற்கூறிய கார ணத்தால் மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த மின்கட்டண உயர்வு என்பது தொழில்துறையினர் மட்டும் அல்லாது, பொ துமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு ஒட்டுமொத்தமாக மின்கட் டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img