fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான கோகோ போட்டிகள்: கிருஷ்ணகிரி அணிக்கு சாம்பியன் பட்டம்

மாநில அளவிலான கோகோ போட்டிகள்: கிருஷ்ணகிரி அணிக்கு சாம்பியன் பட்டம்

வெட்ரான்ஸ் இந்தியா அமைப்பு மூலம், 17 வயதிற்குட்பட்ட மாணவியருக்கு, மாநில அளவிலான கோ-கோ போட்டிகள், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த போட்டியில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட, 14 மாவட்டங்களைச் சேர்ந்த, 240 மாணவியர், குழு மேலாளர்கள், பயிற்றுநர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டிகளில், கோவை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வானது.
இதில், வெற்றி பெற்ற அணிக்கு, பரிசு மற்றும் கோப்பைகளை முன்னாள் நகர் மன்றத் தலைவர் பரிதாநவாப் வழங்கி பாராட்டினார்.

முதல் இடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்ற கிருஷ்ணகிரி அணிக்கு கோப்பை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற திருப்பத்தூர் அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெற்ற சேலம் அணிக்கு 7 ஆயிரம் ரூபாயும், நான்காம் இடம் பெற்ற கோவை அணிக்கு 5 ஆயிரம் ரூபாயும் பரிசு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வெட்ரான்ஸ் இந்தியா தேசிய இணைச்செயலாளர் பிரேம்ராஜ், மாநில செயலாளர் சுதாகர், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன், உடற்கல்வி இயக்குனர் திவ்யா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை இந்தியா கோ கோ இணைச்செயலாளர் மாணிக்கம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவியர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img