கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது.
கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி வழிகாட்டுதலில், முதல்வர் முனைவர் மு.அகிலா தலைமை தாங்கி பேசும்போது, கடந்த ஆண்டு மாணவர்கள் புரிந்த சாதனைகள், மற்றும் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றதை பட்டியலிட்டார்.
21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு வழங்கும் விதமாக எல் அண்ட் டி, கோர்சீரா, நாஸ்காம் போன்ற ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வகுப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, வளாகத்தில் சுமார் 10 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயிற்சி மையங்களில் எதிர்கால தொழில்நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என்றார்.
சிறப்பு விருந்தினர் சிந்தனை கவிஞர் கவிதாசன் பேசும்போது, கடந்த மூன்று தலைமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தைவிட மிக வேகமான மாற்றம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.
எனவே வேகமாக வளரும் மாற்றங்களை எதிர்கொள்ளவும், புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சிறந்த திறன்களை வளர்ப்பது போல் சிறந்த குண நலன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி அனுப்பிய வாழ்த்துச் செய்தி
கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் கொண்ட தரமான கல்வி சூழலை வழங்குவதில் உறுதி கொண்டுள்ளது.
பயிலும் மாண வர்கள் அனைத்து விதத்திலும் சிறந்த வல்லுனர்களாக பட்டம் பெற்று வருவதற்கு தேவையான வாய்ப் புகளைக் கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
கௌரவ விருந்தினர் நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா பேசும்போது, வாழ்க்கையின் நோக்கத்தையும், இலட் சியத்தையும் வரையறுத்து அதை அடைவதற்கான குறிக்கோளோடு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என்றார்.
கௌரவ விருந்தினர் கோவை ஷ்னீடர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவ னத்தின் மனித வள தொழில் முறை பங்குதாரர் ஹரி பிரசாத் பேசும்போது,
பயிலும் மாணவர்கள் சிறந்த பொறியாளர்களாக வர வேண்டும்.
சிறந்த பொறியாளரின் முதன்மையான அக்கறை நாட்டையும், சமுதாயத் தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.