fbpx
Homeபிற செய்திகள்மரபியல் விஞ்ஞானி கிரிஹர் ஜோகன் மெண்டல் பிறந்தநாள் விழா

மரபியல் விஞ்ஞானி கிரிஹர் ஜோகன் மெண்டல் பிறந்தநாள் விழா

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையமும், இந்திய பயிர் இனப்பெருக்க விஞ்ஞானிகள் சங்கமும் இணைந்து மரபியல் விஞ்ஞானி முனைவர் கிரிஹர் ஜோகன் மெண்டலின் 200-வது பிறந்தநாளை கொண்டாடியது.
விழாவுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார் தலைமை தாங்கினார்.


முன்னாள் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் ம.மகேஷ்வரன் கிரிஹர்மெண்டல் காலத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய மரபியல் வளர்ச்சி என்ற தலைப்பில் விரிவுரை யாற்றினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமுன்னாள் பதிவாளர் மற்றும் பயிர் இனப்பெருக்கம் மரபி யல் மைய முன்னாள் இயக்குநர் முனைவர் சி.ஆர். அனந்தகுமார், முதல்வர் (வேளாண்மை) முனைவர் மா.கல்யாணசுந்தரம், நெல் இன விருத்தி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கு.கணேச மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தமிழ்நாடு வேளாண் பல்க லைக் கழகத்தைச் சார்ந்த 12 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியம் வரைதல், இணை யதள ஓவியப்போட்டி, வினாடி வினா நிகழ்ச்சிகள் இணைய வழியில் நடந்தன.


கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும், திருச்சி வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் மற்றும் திருச்சி தோட்டக்கலைகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் இரண்டாவது பரிசையும் வென்றனர்.
மொத்தம் 800-க்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், நேரிலும் இணைய வழியிலும் பங்கேற்றனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை. தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் இயக்குநர் மற்றும் இந்திய பயிர் இனப்பெருக்க விஞ்ஞானிகள் சங்கத்தலைவர் முனைவர் எஸ்.கீதா வரவேற்றார்.


பேராசிரியர் மற்றும் தலைவர் (பருத்திதுறை) மற்றும் செயலாளர், இந்திய பயிர் இனப்பெருக்க விஞ்ஞானிகள் சங்க முனைவர் எஸ். ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img