fbpx
Homeபிற செய்திகள்மக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் சேலம் சின்னம்மாபேட்டையில் திறப்பு

மக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் சேலம் சின்னம்மாபேட்டையில் திறப்பு

சின்னம்மா பேட்டை 9-வது கோட்டம் மாமன்ற உறுப்பினர் தெய் வலிங்கம் திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
பகுதி செயலாளர் ராஜா, கோட்ட செயலாளர் சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கட்சியின் நலிவடைந்த மூத்த நிர்வாகிகள் 16 பேருக்கு தலா ரூ.750 வீதம் நலத்திட்ட உதவி வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவி மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத் தில் வழங்கப்படும் என்று 9 வது கோட்டை மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தெரிவித்தார்.
லோகு, சம்பத், மாது, கோபால், அன்பழகன், ரகுபதி மற்றும் திமுக கழக நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img