சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், அனுசுயா மஹாலில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மானாமதுரை ஒன்றியக்குழு தலைவர் லதா அண்ணாதுரை, தனித்துணை ஆட்சியர் சமூகப்பாதுகாப்புத்திட்டம் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மானாமதுரை நகர்மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் உட்பட பலர் உள்ளனர்.