fbpx
Homeபிற செய்திகள்போர்டிஸ் மருத்துவமனை சார்பில் சுதந்திர தின ரத்த தான முகாம்

போர்டிஸ் மருத்துவமனை சார்பில் சுதந்திர தின ரத்த தான முகாம்

75-வது சுதந்திர தினத்தை யொட்டி, வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவ மனை, நரிஷ்மென்ட் பார் நீடி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இரத்த தான முகாமை நடத்தியது.

முதன்மை விருந் தினராக சமூக ஆர்வலரும், ம.தி.மு.க.வின் முதன்மைச் செயலாளருமான துரை வையாபுரி உள்ளிட் டோர் கலந்துகொண் டனர். 
ஃபோர்டிஸ் மருத்துவ மனையின் மண்டல இயக்குநர் வெங்கட் ஃபனி தர் நெல்லூரிபேசுகையில், “இரத்தப் பற்றாக்குறை தீவிர கவலை அளிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (கீபிளி) கூற்றுப்படி, இந்தியா ஆண்டுக்கு 2 மில்லியன் யூனிட் இரத்த பற்றாக்கு றையால்பாதிக்கப்படுகிறது.

இந்திய மக்கள் தொகையில் 1% மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் இரத்த தானம் செய்வதே இதற்குக் காரணம். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. ஆரோக்கியமான நன்கொ டையாளர்கள் இரத்த தானம் செய்வதன் மூலம் உயிர்களைக் காப் பாற்றுவதற்கானமுக்கிய சேவையை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சுகாதார நிறுவனமாக, நமது தமிழ்நாட்டிலும் தேசத் திலும் இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்துரைப்பதற்கான விழி ப்புணர்வு இயக்கம் மற்றும் பிரச்சாரங்களில் நாம் முன்னணியில் இருக்க வேண்டும் என்றார்.

நரிஷ்மென்ட் பார் நீடி அமைப்பாளரான ஆர்.வி. சதீஷ் குமார் கூறுகையில், “இயன்ற வரைபல உயிர்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இரத்த தான முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. ஆரோக்கியமான சமூகத் தை உருவாக்குவதில் தார் மீக பொறுப்பு உணர்வு, உயிர்களைக் காப்பாற்ற உறுதி பூண்டவர்களிடையே நிறுவப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முகாமும் முதன் முறையாக வரு பவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை வாழ்நாள் முழுவதும் நன்கொடையாளர்களாக இருக்க ஊக்குவிக்கிறது. இந்த சுதந்திர தினத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, ​​நன் கொடையாளர்களுக் கும்அங்கீகாரம் வழங்கப் படுவது முக்கியம்” என்றார். இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் பதிவு செய்ய, 044 4020 4040 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img