fbpx
Homeபிற செய்திகள்போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கோவை கல்லூரி விழாவில் டிஐஜி முத்துசாமி எச்சரிக்கை

போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கோவை கல்லூரி விழாவில் டிஐஜி முத்துசாமி எச்சரிக்கை

போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை டிஐஜி முத்துசாமி எச்சரித்துள்ளார்.

போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோவை குரும்பப்பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செந்தூரப் பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவை மேற்கு மண்டல டிஐஜி முத்துசாமி கலந்துகொண்டார். அவரது முன்னிலையில் மாணவ மாணவிகள் போதைப்பொருள் தீமைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்வில் டிஐஜி முத்துசாமி பேசுகையில், `தமிழக அரசு போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஒரு வார காலம் நடத்த திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் குற்றச் செயல்களுக்கு போதைப் பழக்கமே முழு காரணமாக இருப்பதாகவும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும் நல்ல பழக்கவழக்கங்களே வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார், துணை முதல்வர்கள் விவேகானந்தன், தமிழ்ச்செல்வன், pro மனிதநேயம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img