Homeபிற செய்திகள்பெ.நா.பாளையம் மேம்பாலப் பணிகள் கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு

பெ.நா.பாளையம் மேம்பாலப் பணிகள் கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு

கோவை மாவட்டம், பெரியநாயக் கன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும், மேம்பாலப்பணிகளை மாவ ட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டு, பணி களை விரைந்து முடித்திட அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும், மேம்பாலப்ப ணிகள் நடைபெற்று வருவது தொ டர்பாக, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் நேற்று (ஜூன் 23) மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டு பணி களை பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் சமுத் திரகனி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர் லட்சுமணன், பெரிய நாயக்கன்பாளையம் பேரூ ராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஆண்டு திட்டத்தின்கீழ் ரூ.115.24 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை எண்.67ல் கி.மீ. 362/790 முதல் கி.மீ. 364/555 வரை பெரிய நாயக்கன்பாளையம் சந்திப்பு வழி யாக மேம்பாலம் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன.

இந்த மேம்பாலப்பணிகள் நடை பெற்றுவரும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் மேம்பாலப் பணிளை விரைந்து முடித்திட கோரிக்கை வைத்தனர்.

இப்பணிகள் குறித்த காலகெடுவிற் குள் முடியாமல் உள்ளது குறித்து நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை, மின்சாரத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள் ளிட்ட துறைகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

குடிநீர் குழாய்கள், உயர் மின்னழுத்த கம்பிகள் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட தேவையான பணிகளை தாமதிக்காமல் விரை ந்து முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட் டார்.

படிக்க வேண்டும்

spot_img