fbpx
Homeபிற செய்திகள்பெ.நா.பாளையத்தில் காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

பெ.நா.பாளையத்தில் காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள துணை காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் காவலர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உட்கோட்ட அலுவலகங்களிலும் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியநாயக்கன்பாளையத்தில் அன்னை கரங்கள் தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட முகாமை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் தொடக்கி வைத்தார்.

அப்போது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலக், சிறப்பு உதவி ஆய்வாளர் தம்புராஜ், அன்னை கரங்கள் கோபி, காவலர்கள் பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

முகாமில் பெ.நா.பாளையம் காவல்நிலைய வளாகக்குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல் பெ.நாபாளையம் பேரூராட்சி சார்பில் விவேகானந்தபுரத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்த முகாமில் 350க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சியின் துப்புரவு ஆய்வாளர் பரமசிவம் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img