fbpx
Homeதலையங்கம்பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்

பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு பொதுமக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இது நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு என்று மகிழ்ச்சி பொங்க மத்திய அரசாங்கம் பிரகடனப்படுத்தியது.

விவசாயிகளுக்கு இது உதவிக்கரம் நீட்டும், விலைவாசியை குறைக்கும், பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்பட செய்யும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.


பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.100க்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்பது மத்திய அரசாங்கத்தின் குறிக்கோள்.

மத்திய அரசாங்கத்தின் விலைகுறைப்புக்கு பிறகு 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மதிப்பு கூட்டு வரியை குறைத்திருக்கிறார்கள் என்று எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பட்ஜெட்டிலேயே பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது.

இந்த விலைகுறைப்பு முழு வலியை போக்கா விட்டாலும் சற்று நிவாரணமாக வலி குறைந்திருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும்.

இந்த வலியை முழுமையாக போக்க வேண்டும் என்றால் மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் இன்னும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img