fbpx
Homeபிற செய்திகள்புதுமைப் பெண் திட்டம்: கோவையில் 620 மாணவிகளுக்கு ரூ.1000-அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

புதுமைப் பெண் திட்டம்: கோவையில் 620 மாணவிகளுக்கு ரூ.1000-அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

உயர்கல்வி பயிலும் மாணவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 620 மாணவிகளுக்கு ரூ.1000 திங்கள் கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 199 கல்லூரிகளைச் சேர்ந்த 3,596 மாணவிகள் இணைக் கப்பட்டுள்ளனர்.

இவர்களில் முதல்கட்டமாக 620 மாணவிகளுக்கு தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1000 உதவித் தொகையை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டா சமீரன், கோவை மக்க ளவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை ஆணையாளர் ஷர்மிளா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுமைப் பெண் திட்டம் குறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழிற் கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி நேரடியாக செலுத்தப்படும்.

மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவராக இருத்தல் வேண்டும்.

தனியார் பள்ளியில் இலவச கல்வி திட்டத்தின்கீழ் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயின்று பின் 9முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவிகளும் பயன் பெற முடியும். இத்திட்டத்துக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லீttஜீ://ஜீமீஸீளீணீறீஸ்வீ/tஸீ/ரீஷீ.வீஸீ என்ற இணையதளத்தில் மாணவிகள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img