தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்களுக்கான புகையிலை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் வர்த்தகர் மகாலில் நடந்தது.
கூட்டத்திற்கு, உணவு பாதுகாப்பு துறை தர்மபுரி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமை தாங்கி பேசியதாவது:
தமிழக அரசு குட்கா, பான்பராக், புகையிலை போன்ற போதை பொருட்கள் முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாநி லத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்பராக் மற்றும் தடைசெய்யப்பட்ட புகை யிலை விற்பனை செய்தால் உடனடியாக அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைக்கு சீல் வைக்கப்படும். இன்னும் 2 மாதத்தில் புகையிலை இல்லாத மாவட்டமாக தர்மபுரியை உருவாக்க வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புகையிலை தொடர்பான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார். தர்மபுரி நகர வணிகர் சங்கத்தலைவர் உத் தண்டி, விநியோகிப்பாளர் சங்க செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரத்தில் உள்ள மளிகைக்கடை, பெட்டிக்கடை மற்றும் அனைத்து வணிகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப் பட்டது. தர்மபுரி நகர வர்த்தகர் சங்கச் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.



