வேளாண் சார்ந்த பாடத்தை ஓன்று முதல் 12 -ம் வகுப்பு வரை பள்ளிகளில் அறிமுகம் செய்ய எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது என்று உதகை மண்டல மைய இந்திய மண் மற்றும் நீர்வ ள பாதுகாப்பு நிறுவன நிலையத் தலைவர் கூ.கண்ணன் பேசினார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவ னங்களும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் நிறைவடைந்ததையொட்டி, 75 வாரங்கள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக உதகையில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம், மண்டல மையத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்தன.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் சிறப்பு விழா கடந்த 23-ம் தேதி நடை பெற்றது. முனைவர் வெ. கஸ்துரி திலகம் வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச. மணிவண்ணன் பேசுகையில், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தமது கடமையை செய்வதன் மூலம் சுதந்திர இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும் என்றார்.
நிலையத்தின் தலைவர் முனைவர் கூ. கண்ணன் பேசுகையில், எதிர்கால இந்தியா, மாணவர்களிடம் உள்ளது. வேளாண் சார்ந்த பாடத்தை ஓன்று முதல் 12 -ம் வகுப்பு வரை, பள்ளிகளில் அறிமுகம் செய்ய எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது என்றார்.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விவசா யத்திற்கு பயன்படுத்துவது குறித்து ஆர்.டி.ஓ. டிரஸ்ட் ச.ராஜ்குமார் பேசினார்.
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதகை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக் குனர் சிபிலாமேரி பரிசுகளையும் சான் றிதழ்களையும் வழங்கினார்.
வினாடி வினா போட்டியை முனைவர் சுதீர்குமார், ஒருங்கிணைத்து நடத்தினார். முனைவர் வனிதா நன்றி கூறினார்.



