கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அண்ணா பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றிய மற்றும் பேரூர் கழக திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பர்கூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் உள்ள அண்ணா சிலை அருகில் நடந்த இந்த விழாவிற்கு பர்கூர் எம்எல்ஏ., மதியழகன் தலைமை வகித்தார். ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசு, பேரூர் செயலாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன் னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன் பங்கேற்று, அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது விழாவில் பங் கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் குப்புசாமி, சவுந்திரபாண்டியன், ஐயப்பன், சீனிவாசன், சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந் துகொண்டனர்.



