fbpx
Homeபிற செய்திகள்பரளிக்காடு சுற்றுலா செல்ல வனத்துறை அனுமதி

பரளிக்காடு சுற்றுலா செல்ல வனத்துறை அனுமதி

கோவை மாவட்டத்தில் உள்ள பரளிக்காடுக்கு சுற்றுலா செல்ல, பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பரளிக்காடு சூழல்‌ சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்ய 28-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுகிறது.

பரளிக்காடு சுற்றுலாத் தலத்தில்‌ கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்‌.

காரமடை வனச்சரகத்தில்‌ செயல்பட்டு வரும்‌ பரளிக்காடு சூழல்‌ சுற்றுலாத் தலத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்த அறிக்கை வருமாறு:
சுற்றுலாப்பயணிகள்‌ www.coimbatorewildrness.com என்ற இணையதளம்‌ மூலம்‌ முன்பதிவு செய்ய வேண்டும்‌.

கட்டணம்‌ பெரியவர்களுக்கு ரூ.550, சிறியவர்களுக்கு (5 வயது முதல்‌ 13 வயது வரை) ரூ.450.சுற்றுலாவிற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்,காலை 10 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

பயணிகள்‌ தங்கள்‌ சொந்த வாகனங்களில்‌ பரளிக்காடு சுற்றுலாத் தலத்திற்கு செல்லலாம்‌ அல்லது பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்தலாம்‌.
பவானி ஆற்றில்‌ பரிசலில்‌ பயணம்‌ செய்து பில்லூர்‌ அணையின்‌ அழகை கண்டு களிக்கலாம்‌.

மதிய உணவு-பழங்குடி மக்களால்‌ நேர்த்தியான முறையில்‌ தயாரிக்கப்பட்டு சுற்றுலாவிற்கு வருகை தரும்‌ பயணிகளுக்கு வழங்கப்படும்‌. மாலையில் பவா னி ஆற்றில்‌ குளிக்கலாம். மாலை 4.00 மணிக்கு சுற்றுலா நிறைவடையும். இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img