நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட நாடுகாணி, பந்தலூர் பஜார், உப்பட்டி பஜார் ஆகிய பகுதிகளிலும், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவர்சோலை பஜார் மற்றும் பாடந்துரை ஆகிய பகுதிகளிலும் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்தும், ஆதரித்தும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை கழக துணை பொது செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வாக்கு சேகரித்தார்.
மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



