கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 15ஆவது பட்டமளிப்புவிழா இன்று (5ம் தேதி) காலை 10.30மணிக்கு முனைவர் மா.ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்விநிறுவனத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் முதன்மையான நோக்கம் ஒரு தனிநபரின் அறிவுசார் அழகியல், சமூக, உடல், உணர்ச்சி நெறிமுறை மற்றும் தார்மீக அம்சங்களை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேம்படுத்துவது ஆகும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எழும் சவால்களை எதிர்கொள்ள மாணவ – மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தல், புதிய கல்வித்திட்டங்களை அறிமுகம் செய்தல் மற்றும் இடைநிற்றலைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் புதிய கல்விக்கொள்கையின் மூலம் நிறைவேற்ற முடியும்.
பாரத நாட்டில் பழங்காலத்தில் செயல்பட்டு வந்த நாளந்தா மற்றும் தக்சசீலா ஆகிய பல்கலைக் கழகங்கள் வேதம், தத்துவம், மருத் துவம், தர்க்கம், அறிவியல், கலை உள்ளிட்ட பல்துறை அறிவை வளர்த்தது. உள்நாட்டு மற்றும் உலகின் பலநாட்டு மாணவர்களைத் தன்பால் ஈர்த்தது.
தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர் களின் ஆட்சியில் கட்டடக்கலை, பொறியியல், இலக்கியம், இலக் கணம் முதலிய துறைகள் வளர்ச்சிப் பெற்றன.
பல நூற்றாண்டுகளாகப் பரந்தநிலையில் இருந்த கல்வி வாய்ப்புகள் படிப்படியாகக் குறுகி சமீபஆண்டுகளில் குறிப் பிட்ட பாடங்களில் நிபுணத் துவம் பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இன் றைய நிலையில் நம்நாட்டின் வளர்ச்சிக்குப் பலதுறை அறிவை வளப்படுத்தும் கல்வித்திட்டமே அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாகக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி அனைவரையும் வரவேற்றுத் தலைமையுரையாற் றினார். பட்டமளிப்பு விழா நிகழ்வைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. லச்சுமணசாமி தொடங்கிவைத்தார்.
இப்பட்டமளிப்பு விழாவில் இளநிலைத்தேர்வில் தரவரிசைப்பெற்ற 24 பட் டதாரிகளுக்கு முதலில் பட் டங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இளநிலை பட்டதாரிகள் 1165 பேருக்குச் சிறப்புவிருந்தினர் பட்டங்களை வழங்கினார்.
விழாவின் நிறைவில்பட்டம்பெற்ற பட்டதாரிகள் அனைவரும் எழுந்து நின்று உறுதி மொழியேற்றனர்.