Homeபிற செய்திகள்‘நவாப்’ பேத்தியின் புயலாக ஒலித்த நட்டுவாங்கம்: மாணவி ஹர்ஷிதாவின் நாட்டிய அரங்கேற்றம்

‘நவாப்’ பேத்தியின் புயலாக ஒலித்த நட்டுவாங்கம்: மாணவி ஹர்ஷிதாவின் நாட்டிய அரங்கேற்றம்

நாடக சக்கரவர்த்தி நவாப் டி.எஸ்..ராஜமா ணிக்கம் பிள்ளையின் கலை வாரிசுகள் நடத்தும் மதுரை தேவி பால வினோத சங்கீத சபையாரின் ஸ்ரீ சந்தன நாட்டியாலயா தனது 12ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில், ஹர்ஷிதா ராகவி என்ற மாணவியின் அரங்கேற்றம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தின ராக பிஎஸ்என்எல் பொது மேலாளர் சந்திரசேனா மற்றும் மதுரை அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் வி.தாராதேவி, திருச்சி அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் சித்ரா மற்றும் ஒருங் கிணைப்பா ளர்கள் டி.மங்களச்செல்வி, ஞி.சுஜாதா ராஜஸ்ரீ, கனரா வங்கி ஊழியர் வெங்கட சுப்ரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மீனாட்சி யின் வர்ணத்திற்கு 40 நிமிடமும், புயல் என ஒலித்த நட்டுவாங்கமும், அனல் பறக்க செய்த நாட்டியமும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

இளம் வயதில் துரித நடை நட்டுவாங்கம் செய் தற்கு, நட்டுவாங்க புயல் அரசி என்ற பட்டத்தையும், சான்றிதழையும் நவாப் ராஜமாணிக்கத்தின் கொள்ளு பேத்தியும் எஸ்.எஸ்.என். கல்லூரி முதல்வரின் மகளுமான நி.சந்தனேஸ்வரிக்கு சிறப்பு விருந்தினர் வி.தாரா தேவி வழங்கினார்.

செல்வி வி.ஹர்ஷிதா ராகவிக்கு சிறப்பு விருந்தினர்களால் அரங்கேற்றச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பெற்றோர், உறவினர் கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img