தகவல் தொழில் நுட் பத்துறையின் எதிர்காலமாக பெங்களூரு இருந்து வருகிறது. அது போன்று தொழில்துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசினார். கோவையில் சுகுணா குழுமத்தின் நிறுவனர் ஜி.ராமசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா நடந்தது.
விழாவில், சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி பேசியதாவது: ஜி.ராமசாமி நாயுடு, 1923-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி பாப்ப நாயக்கன்பாளையத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
அரசு பள்ளி யில் படித்த இவரை, பொறி யியல் படிப்பு சென்னைக்கு செல்ல வைத்தது.
1959-ம் ஆண்டில் உள்ளூரிலேயே பம்ப் மோட்டார் தயாரிக்கும் தெ £ழிற்சாலையை சுகுணா இன்டஸ்ட்ரீஸ் என்ற பெய ரில் துவக்கினார்.
1973-ம் ஆண்டில், தன்னைவிட சேவையே முக்கியமானது என கருதி அறக்கட்டளையை தொட ங்கி, ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார்.
தொடர்ந்து 6 ஆண்டுகள் அதிக வருமான வரி செலுத்துபவராக தேர்வு செய்யப்பட்டு ரா ஷ்ட்ரிய சம்மன் விருது பெற்றார்.
எப்போதும்,;நாடு உனக்கு என்ன செய்தது என்பதை காட்டிலும், நாட்டுக்கு நீ என்ன செ ய்தாய் எனக்கேள்& ; என்ற வாக்கில் உறு தியான நம்பிக்கை கொண்டிருந் தார்.
அவர் விட்டுச்சென்ற பணியை, அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர் என்றார். கோவை காளப்பட்டி ரே £ட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் ராம சாமி நாயுடுவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்து, கர்நாடக முதல் வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: சுகுணா குழும நிறுவனர் ராமசாமி சிறந்த தொலைநோக்கு சிந்தனை கொண்டவர். அதனால் தான் அவரால் சாதிக்க முடிந்தது. தங்களு க்கு மட்டுமின்றி, தனது சமுதாயத்துக்காகவும் பல சேவை செய்து உள்ளனர்.
அவர்களை நாம் கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டும். சிறு, குறுந்தொழிலுக்கு கோவை யும், பின்னலாடைக்கு திருப்பூரும் புகழ்பெற்றது. இந்த 2 பகுதிகளும் தொழிலில் சாதித்து வரு கின்றன.
தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநில ங்களுக்கும் மையமாக கோவை விளங்கி வரு கிறது. தகவல் தொ ழில்நுட்பத்துறையின் எதிர்காலமாக பெங்களூரு இருந்து வருகிறது.
அது போன்று தொழில் துறையின் எதிர்காலமாக கோவை மாற வேண்டும்.
25 ஆண்டுகள் கடுமை யாக உழைத்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.சுகுணா குழுமங்களின் இயக்குநர் சுகுணா, அர்ச்சனா அருண் ரங்கநாதன், நிர்வாக இயக்குநர் அனிஷ்குமார், சாந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



