டெல்லியில் நடந்தது போல மும்பையிலும் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கொடூர செயலை பொதுமக்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மும்பை புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 30 வயது இருக்கும். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். அப்பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தப் பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். அதன் பிறகு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அவரது உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் கூறினர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
அவரை அக்கும்பல் கொடூரமாக தாக்கியது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே பாணியில் நடந்த மும்பை கற்பழிப்பு மீண்டும் தேசத்தை உலுக்கி உள்ளது.



