Homeபிற செய்திகள்தேசிய அளவிலான ஹேக்கத்தன் போட்டியில் அவினாசிலிங்கம் மாணவிகளுக்கு முதல் பரிசு

தேசிய அளவிலான ஹேக்கத்தன் போட்டியில் அவினாசிலிங்கம் மாணவிகளுக்கு முதல் பரிசு

தேசிய அளவில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில், அவினாசிலிங்கம் கல்லூரி பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் வெற்றி பெற்று உள்ளனர்.

பல்வேறு மத்திய அரசு அமைப்புகளால் வழங்கப் பட்ட கேள்விகளுக்குத் தீர்வு காண புதிய மென்பொருள் உருவாக்க தேசிய அளவில் ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.

பல்வேறு கல்லூரி மாணவர்கள் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தலைப்புகளில் பங்கேற்றனர். இதில் கோவையில் உள்ள அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஃபார் சயின்ஸ் மற்றும் பெண்களுக்கான உயர் கல்வி கல்லூரியின் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவிகள், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை, ஜல் சக்தி அமைச்சகத்தின் ((Department of Drinking Water & Sanitation, Ministry of Jal Shakti) கேள்விக்கான ‘கழிவு மேலாண்மை அமைப்பு’ (Waste management system) என்ற தலைப்பிற்கு உடனடி உர இயந்திரம் (QIS)என்ற படைப்பைக் கண்டுபிடித்தனர்.

ஆகஸ்ட் 25 முதல் 29 வரை ஆந்திரப் பிரதே சத்தின், ஓங்கோலில் உள்ள தொழில்நுட்பக் கல் லூரியில் இறுதிச் சுற்று தொடங்கியது.

இதில் சரியான தீர்வை, உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பப் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவிகள், குழுத் தலைவர் தி.வர்ணா தலைமையில் கா.ஹரிணிஸ்ரீ, அ.நிவேதா, க.சிந்தனா, ஹர்ஷினி, சி.கனிஷ்கா ஆகியோரடங்கிய குழு, உதவிப் பேராசிரியர் க.பூஜா வழிகாட்டுதலுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற 7 அணிகளில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசை வென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img