fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாணவர்கள், வியாபாரிகளுக்கு இந்தித் திணிப்பு விளக்க பிரதிகளை மேயர் ஜெகன் விநியோகித்தார்

தூத்துக்குடி மாணவர்கள், வியாபாரிகளுக்கு இந்தித் திணிப்பு விளக்க பிரதிகளை மேயர் ஜெகன் விநியோகித்தார்

மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பாக நிர்வாகிகள் பல்வேறு வகையில் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

இதனையடுத்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமையில், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்தித் திணிப்பு விளக்க கைப்பிரதிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் ராஜா, வட்ட செயலாளர் ரவீந்திரன், தொமுச சந்திரசேகர், ஜாஸ்பர் உள்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img