ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்ன் 153-வது பிறந்த நாளினை முன்னிட்டு வ.உ.சி சிலை அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் இன்று 15.11.22 தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.