fbpx
Homeபிற செய்திகள்தீக்கரகத்துடன் நெருப்பு சிலம்பம் சுற்றி கோவை கல்லூரி மாணவி உலக சாதனை

தீக்கரகத்துடன் நெருப்பு சிலம்பம் சுற்றி கோவை கல்லூரி மாணவி உலக சாதனை

கோவையில் கண்களில் கூர்மையான பிளேடுகளுடன் ,ஐஸ்கட்டி மீது கால் முட்டி களை வளைத்து நின்றபடி, தலையில் தீக்கரகம் ,இரண்டு கைகளில் நெருப்பு சிலம்பத்தைத் தொடர்ந்து 15நிமிடம் சுற்றி உலகசாதனை செய்து அசத்தினார் கல்லூரி மாணவி.

கோவை செலக்கரச்சல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மோனிஷா.வீராசாமி, ஜெயந்தி தம்பதியரின் மகளான, இவர், கதிர்கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

சிறுவயது முதலே நாட்டுப் புறக்கலைகளில் ஆர்வமுடைய மோனிஷா ,அதே பகுதியில் வீரத்தமி ழன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் முறையாக சிலம்பம் பயின்று வருகிறார்.

சிலம்பம் சுற்றுவதில் மோனிஷாவின் உலக சாதனை நிகழ்ச்சி, வீரத்தமிழன் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாணவியின் ஆசான், டாக்டர் கன கராஜ், ஐ.நா.வின் இளைஞர் அமைப்பின் தூதுவர் டாக்டர் கலையரசன், கிராமமக்கள் முன் னிலையில் இச்சா தனை நடைபெற்றது.

இதில், மோனிஷா ஐஸ்கட்டி மீது கால்களை முட்டி போட்ட நிலையில் தலையில் தீக்கரகம், கண்களில் கூர்மையான பிளேடுகளுடன் இருகைகளில் நெருப்பு சிலம் பத்தைத் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை படைத்தார்.

தற்காப்பு கலை மற்றும் கிராமிய கலைகளை இணைத்து செய்த ,இவரது இந்தசாதனை பீனிக்ஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

உலக சாதனை படைத்த மாணவி மோனிஷாவுக்கு டாக்டர் கனகராஜ், டாக்டர் கலையரசன் ஆகி யோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.

மோனிஷாவிற்கு, செலக்கரச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கருப்புசாமி ,முன்னாள் தலைவர் சாமிநாதன் உட்பட பொதுமக்கள் ஊக்கம ளித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img