சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் 222வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில் இருக்கும் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாநில கவுரவ ஆலோசகர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட அவைத்தலைவர் கட்டபொம்மு ராஜேஷ். மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ராமசாமி, மாவட்ட செயல் தலைவர் மதன்மோகன், மாவட்டப் பொருளாளர் சந்திரசேகர், இளைஞரணித் தலைவர் உதயகுமார், இளைஞரணி செயலாளர் ராஜேஷ் குமார், மாநில செய்தித் தொடர்பாளர் தாதா நாயக்கர் மற்றும் நிர்வாகிகள் மணிகண்டன், தாமரைக் கண்ணன், ஜமீன் சிவா, சண்முகம், ராஜ், பேச்சிமுத்து, ராஜேந்திரன், ரத்தினசாமி, ராஜன், மாரிச்சாமி, குணா பாண்டியன், சரவண குமார் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினர் கலந்து கொண்டனர்.



