மருத்துவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதியை மருத்துவர் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கல்லூரி மன்றத்தில் மருத்துவர் தின சிறப்பு நிகழ்ச்சி நேற்று மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி முன்னிலையில் நடைபெற்றது.
மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சிவக்குமார், துணை முதல்வர் (பொ), மருத்துவர் ஜி.இளவ ரசன், உள்ளிருப்பு மருத்துவர் நாகவேந்தன் உள்ளிட்டோர் சிறப்பு ரையாற்றினர்.
விழாவில் அனைத்து மருத்துவ பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள், போத கர்கள், உதவி உள்ளிருப்பு மருத் துவர்கள் அனைவருக்கும், சிறப்பாக பணிபுரிந்ததற்காக நற்சான்றிதழ் களை முதல்வர் வழங்கினார்.
மேலும் காது கேளாத குழந்தைகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை சிறப்பாக செய்தமைக்காக சிறப்பாக பணியாற்றிய காது, மூக்கு மற்றும் தொண்டைப்பிரிவின் துறைத் தலைவர் மரு.செந்தில்குமரனுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.



