தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலாக செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, காது முற்றிலும் கேட்காத ஆறு வயதுக்கு உட்பட்ட குழந் தைகளுக்கு, காக்ளர் இம்ப்ளான்ட்கருவி அறுவை சிகிச்சை மூலம் பொருத்தும் சிகிச்சை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில்,காது, மூக்கு, தொண்டை துறை மூலம் கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த அறுவை சிகிச் சைக்காக பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தையை தேர்வு செய்தனர். இதற்காக மொரப்பூர் அடுத்த எல வடை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் -நர்மதா தம்பதிகளின் ஆண் குழந்தையை முறையாக பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை மூலம் காக்ளர் இம்ப்ளான்ட் உள்ளமைப்பு (காதுக்குள்) கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
தற்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை முடிந்து, குழந்தைக்கு செவிதிறன் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக குழந்தைக்கு செவிதிறன் கிடைத்துள்ளதால், குழந் தையின் பெற்றோர் மருத் துவர்களுக்கும், அரசுக்கு நன்றிதெரிவித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைதலைவர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:
அறுவை சிகிச்சையை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் செய்தார்.
இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் வரை செலவாகும். இதில் கருவி மட்டுமே 7 லட்சம் ரூபாய். ஆனால் இந்த அறுவை சிகிச்சையை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட் டுள்ளது.
இது தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலில் தற்போது இந்த அறுவை சிகிச்சை தொடங் கப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக தயார் நிலையில் இருந்து வருகிறோம்.
இந்த அறுவை சிகிச்சை பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள குழந் தைகளுக்கு, ஆறு வயதிற்குள் அடையாளம் காணப்பட்டு அறுவை சிகிச்சை செய்தால் பலன் அளிக்கும்.
இதற்கான அனைத்து வசதிகளும், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.



