fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

தர்மபுரி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

தர்மபுரி அருகே தனியார் செல்போன் டவர் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட் சிக்கு உட்பட்ட வகுத்துபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு இந்த பகுதியில் தனியார் நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்தது.

இதனால் அந்த பகுதி மக்கள் செல்போன் டவர் அமைப்பதால் தங்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் அபா யம் உள்ளது என கருதி எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதையடுத்து செல் போன் அமைக்கும் பணி பாதியுடன் நிறுத் தப்பட்டது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து நேற்று செல்போன் டவர் இயங்குவதற்கு தேவையான ஜென ரேட்டர் உள்ளிட்ட தள வாட பொருட்களை தனியார் செல்போன் நிறு வனத்தினர் கொண்டு வந்து பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதைப் பார்த்த கிராம மக்கள் தளவாட பொருட்களை பொருத் தக்கூடாது. செல்போன் டவர் இயங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர்.

படிக்க வேண்டும்

spot_img