fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் அண்ணா பிறந்த தின விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தர்மபுரியில் அண்ணா பிறந்த தின விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தர்மபுரியில் பல்வேறு கட்சியினர் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தர்மபுரியில் நாலு ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியி னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தர்மபுரி நகர திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், நகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்க மணி, சந்திரமோகன், சிவன், நகர, பொறுப்புக் குழு உறுப் பினர்கள் முல்லை வேந்தன், காசிநாதன், மாவட்ட நிர்வாகிகள் பொன் மகேஷ் வரன், ராஜா, ரஹீம், முத்து லட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிமுக- அமமுக
தர்மபுரி மாவட்ட மற்றும் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் அமைப்புச் செயலாளர் கே. சிங்காரம், விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஏ. கோவிந்தசாமி எம்.எல்.ஏ., ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஒன்றிய செயலாளர்கள் நீலப்புரம் செல்வம், சிவப் பிரகாசம், பெரியண்ணன், பூங்கொடி சேகர், முன்னாள் மாவட்ட செய லாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, தகடூர் விஜயன், சின் அருள்சாமி, நகர துணை செயலாளர் அறிவாளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகரச் செயலாளர் ராஜா (எ) தனசேகரன் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் முத்து சாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

மாவட்ட நிர்வாகிகள் வேலாயுதம், கோகுல்ராஜ், ரமேஷ்குமார், ராஜா, சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தங்க ராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருமண குழு உறுப்பினர் வஜ்ரவேல், நகரச் செயலாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், சிவபாதம், சுகவனம், நிர்வாகிகள் முத் தியாலு, சேகர்,சின்ராஜ், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img