fbpx
Homeபிற செய்திகள்அதிகரிக்கும் கொரோனா கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

அதிகரிக்கும் கொரோனா கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 17ம் தேதி முதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின் றன.
கோவையில் மால்கள், திரையங் குகள், பூங்காக் கள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கு வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

ஞாயிற்றுகிழமைகளில் அத்தியாவ சிய கடைகள் தவிர மற்ற கடை கள் இயங்குவதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் அனைத்து மால்கள் நகைகடை கள், துணிக்கடைகள் உள்ளிட்ட இதர கடை ஊழியர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

உணவகங்கள் பேக்கரிகளில் ஞாயிற்று கிழமை களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.உழவர் சந்தைகள் 50 சதவீத கடைகளுடன் சுழற்சி முறையில்இயங்க அனுமதிக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப் படும். சந்தைகளில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில வியா பாரிகள் கலந்து கொள்ளாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாண வர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் 4 பேருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு பரிசோதனை செய்யப்பட்டதில் மற்ற மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img