சித்த மருத்துவ முறை கலாச்சார நடை முறைகள், பண்டைய மருத்துவ ஞானத்தை பிரதிபலிக்கிறது. அதன் வேர்கள் பண்டைய தமிழ் நாகரீகத்தில் ஆழமாக பதிந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் முஞ்சாபரா மகேந்திர கலு பாய் பேசினார்.
ஆயுஷ் 2017 -ம் ஆண்டு முதல் வருடந்தோறும், சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய மாமுனி யின் பிறந்தநாளை சித்தர் தினமாக கொண்டாடி வருகிறது.
அதன் பொருட்டு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத் துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஐந்தாவது சித்தர் தினம் ‘தொற்று நோய்களுக்கான பரிகாரத்தில் சித்த மருத்துவத்தின் வலிமை’ எனும் தேசிய மாநாடு, நேற்று (டிச.23) சென்னையில் நடந்தது.
மாநாட்டுக்கு தலை மை தாங்கி, ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது: கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், நாடு முழுவதும், இலவசமாக ஆசாதி-கா-அமிர்த மஹோத்சவ் திட்டத்தின் கீழ் சித்த மருந்துகள் கபசுர குடிநீர், அமுக்குரா சூரணம் மற்றும் ஆயுஷ் தடுப்புமருந்துகளை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இரண்டு காப்பு ரிமைகளை தாக்கல் செய்துள்ளது.
சென்னையில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் தலைமையகம் ரூ.12,09,77,814/- மதிப்பீட்டில் தாம்பரம் சானடோரியத்தில் கட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தேசிய சித்தா மருத்துவ நிறுவனத்தின் புதிய புறநோயாளிகள் கட்டி டமும் விரைவில் திறந்து வைக்கப்படும் என்றார்.
ஆயுஷ் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மத்திய இணை அமைச்சர் முஞ்சாபரா மகேந்திர கலுபாய் பேசியதாவது: சித்த மருத்துவ முறை கலாச்சார நடைமுறைகள், பண்டைய மருத்துவ ஞானத்தை பிரதிபலிக்கிறது.
அதன் வேர்கள் பண்டைய தமிழ் நாகரீகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம்பத்திற்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது.
புற நோயாளிகளுக்கான மின்னணு தரவுப் படிவுகள் அளவிடப்பட்ட தேரன் மென்பொருளை வெற்றிகர மாக உருவாக்கியுள்ளது. சித்த மருத்துவர்கள் உ ருவாக்கிய இந்த மென் பொருள் தற்போது, இந்தியா வெங்கும் ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ நிலையங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றார்.
சிறப்பு ஆயுஷ் செய லாளர், பிரமோத் குமார் பதக் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூ ரிகளை உள்ளடக்கிய 2015-20-ம் ஆண்டில் மொத்தம் 184 புதிய ஆயுஷ் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை நடத்த அனு மதிக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியின் விளைவாக கூடுதலாக 16,824 இளங்கலை இடங்களும் 2258 முதுகலை இடங்களும் கி¬ டத்துள்ளன என்றார்.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் மரு.ஜே.இரா தாகிருஷ்ணன், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநரகம் இயக்குநர் எஸ் கணேஷ், இணை இயக்குநர் பி. பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் மரு. கே.கனகவல்லி வரவேற் றார். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மரு. பி- மீனாகுமாரி நன்றி கூறினார்.



