தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1978&-81-ம் ஆண்டு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க ‘ஃபிரிமேன்’ கூடத்தில் கடந்த 30-ம் தேதி, பட்டம் பெற்று 41 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, ஒன்றுகூடி விழாவாக கொண்டாடினர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை« வந்தரான முனைவர் வெ. கீதாலட்சுமி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.
முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கால ‘டேட்லர்’ என்ற பத்திரிகையை தற் காலத்திற்கு தகுந்தவாறு மறு உருவாக்கம் செய்தனர்.
இந்த டேட்லர் ஒவ்வொரு முன்னாள் மாணவரின் வாழ்க் கையை பிரதிபலிப்பதாக இருந் தது. இந்த ‘டேட்லர்-2.0’ வை துணைவேந்தர் வெளியிட்டார். இத்தகு முயறசியை துணைவேந்தர் பெரிதும் பாராட்டினார்.
முன்னாள் மாணவர்கள் தங் களுக்குள் திரட்டிய ரூபாய் 5 லட்சத்தை பல்கலைக்கழகத்தில் ‘அறக்கட்டளை நிதியாக’ நிறு வுவதற்கு துணைவேந்தரிடம் அளித்தனர். இந்த நிதியிலிருந்து வரும் வட்டித்தொகையைக் கொண்டு ஏழை மாணவர்களின் கல்விக்கு ‘உதவித் தொகை’ வழங்க இருப்பதாகத் தெரிவித்தனர்.
சிறப்புரையாற்றிய துணை வேந்தர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் நடவடிக் கைகள் குறித்தும் அதில் முன்னாள் மாணவர்களின் பங்கு பற்றியும் விளக்கினார். பல்கலைக்கழகத்தின் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
விழாவில், முன்னாள் மாணவர்கள் 54 பேர் பங்கேற்ற னர். இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்தும் வந்து பங் கேற்றனர்.
இவர்கள் தாங்கள் படித்த கல்லூரியில் மறுபடியும் ஒருமுறை பழைய வாழ்க்கையை வாழ்ந்தும், நினைவு கூர்ந்தும் கழித்தனர்.
பழைய நினைவுகளோடு விடை பெற்றுச் சென்றனர்.



