தூத்துக்குடியை தலைமையிட மாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது, தொழிலில் தொலைநோக்கு பார்வை கொண்ட நாடார் சமுதாயத்தை சார்ந்த 10 பேரால், `நாடார் வங்கி’ எனும் பெயரில் 11.11.1921-ல் நிறுவப்பட்டது. பின்னர் 1962-ம் ஆண்டு ‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வங்கி, தற்போது 509 கிளைகளுடன் இந்தியா முழுவதும் பரந்து விரிந்து உள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு வங்கியின் நிறுவனர்களுக்கு வங்கியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இ-லாபியை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன், தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி செயலாளர் ஷிபானா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
மேலும் வழக்கம் போல, இந்த ஆண்டு விழாவிலும் வங்கியில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. அதன் மூலம் 101 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. 80 பள்ளி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.
இதுதவிர, தூத்துக்குடி மாநகரில் வெவ்வேறு இடங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 209 பயனாளிகளுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி பாஸ்கர மஹாலில் கடன் வழங் கும் முகாம் நடந்தது. முகாமை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ் ணன் தொடங்கி வைத்தார்.
கடன் பிரிவு பொது மேலாளர் நாராயணன் வரவேற்றார். தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், தொழிலதி பர்கள் தங்கவேல் நாடார், டேவிட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைக் கான கடிதங்களை வழங்கினர்.
நிகழ்ச்சி முடிவில் துணை பொது மேலாளர் (கடன்பிரிவு) விஜயன் நன்றி கூறினார். இதேபோல் 12 மண்டலங்களிலும் நடந்த அனைத்து முகாம்களில் மொத்தம் 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடி கடன் உதவி தொகை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாலையில் ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் பரதநாட் டியம் மற்றும் இசை கச்சேரியுடன் பெருவிழா தொடங்கியது. பொது மேலாளர் சூரியராஜ் வரவேற்றார்.
முன்னாள் இயக்குனர் சி.எஸ்.ராஜேந்திரன், நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னாள் நிர்வாக இயக்குனரும், முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான கே.வி ராமமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கால் சென்டரை திறந்து வைத்து பேசினார். விழா முடிவில் வங்கியில் கடன் மீட்பு துறை பொது மேலாளர் இன்பமணி நன்றி கூறினார்.
இதற்கிடையே, விழாவில் வங்கி நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்ட னர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டது.
விழாவில் வங்கிகளின் இயக்குனர் குழுவினர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணை பொது மேலாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.