Homeபிற செய்திகள்தமிழ்ச் சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா

தமிழ்ச் சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா

திண்டுக்கல் மாநகர தமிழ் சங்கம் சார்பில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் 5 அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் அமலா தேவி தலைமை வகித்தார். சங்க பொருளாளர் ஆனந்த் முன்னிலையில் வகித்தார்.

காதிகிராம முன்னாள் தமிழ்துறை பேராசிரியர்கள் குருவம்மாள், முத்தையா உட்பட பலர் பேசினர். சேவை புரவலர் முகமது யூசுப் அன்சாரி, ராமசாமி துரைப்பாண்டி ஆகியோர் நூல் மதிப்பீட்டு உரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேயர் இளமதி, அறிஞர் பெருமக்களுக்கு விருதுகளை வழங்கி, நூல்களை வெளியிட்டார்.

இதில் காந்திகிராம பல்கலைக்கழகம் முன்னாள் பேராசிரியர் குருவம்மாள் பேசும்போது, தமிழுக்கு சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இவற்றை மீறி நாம் தமிழ் வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க பேச்சை நிறுத்தச் சொன்னார்கள். நம் தமிழ் பாடல்கள் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. தமிழ் வளர்ச்சி அடைய அனைவரும் தமிழிலேயே உரையாற்ற வேண்டும்.

பிற மொழிச் சொற்கள் கலப்பதை தவிர்க்க வேண்டும், என்றார். முடிவில் தமிழ் சங்க செயலாளர் செல்வி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img