fbpx
Homeபிற செய்திகள்ஜவுளி பொறியியல் துறை சாதனையாளர்களுக்கு தொழில்நுட்ப விருதுகள்: ஐடிஎம்இ அறிவிப்பு

ஜவுளி பொறியியல் துறை சாதனையாளர்களுக்கு தொழில்நுட்ப விருதுகள்: ஐடிஎம்இ அறிவிப்பு

இந்தியாவில் உள்ள திறமை யான, தனித்துவமிக்க தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அவர்களின் பணிகள் மற்றும் அவர்களின் உறுதியான விடா முயற்சிகள் ஆகியவற்றை போற்றும் விதமாக அவர்களுக்கு இந்திய ஐடிஎம்இ சங்கம் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.


தனது 40 ஆண்டு கால வெற்றிகர பயணத்தை குறிக்கும் வகையில் இந்த விருது இந்த சங்கத்தால் தொடங்கப்பட்டது. அதன் 2வது பதிப்பில், இந்த விருதுகள், நாட்டின் ஜவுளி பொறியியல் துறையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்திய விதிவிலக்கான மற்றும் குறிப் பிடத்தக்க பங்களிப்புகளை அங் கீகரிக்கும் விதமாக வழங்கப்பட உள்ளது

விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போசிஷன் மார்ட்டில் நடைபெறுகிறது. உலகில் சூப்பர் தொழில் நுட்ப நாடாக இந்தியா உருவாவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜவுளி பொறியியல் மற் றும் தொழில்நுட்பத்தில் ஆலோசனைகளை வழங்கும் நிபுணத்துவமிக்கவர்களின் புதிய வளர்ச்சிக்கு இந்த சங்கம் உறு துணையாக இருந்து வருகிறது.

விருதுகள் மிகப்பெரிய ஜவுளி பொறியியல் கண்காட்சியின் தொடக்கத்திற்கான அடித்தள மாக அமையும். புகழ்பெற்ற ஜவுளி தொழில்முனைவோர் மற்றும் வளர்ந்து வரும் ஜவுளி முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதில் 5 வகைகளாக பிரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது.


விருது பெறுவோர்: ஜவுளி பொறியியல் துறையில் சிறந்த செயல்திறன் என்ற அடிப்படை யில் வகை 1-ல் ஸ்பின்னிங் பிரி வில் கோவை, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நெசவு மற்றும் தயாரிப்பு

நெசவு மற்றும் தயாரிப்பு பிரிவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரபேடெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், பினிஷிங் பிரிவில் சூரத்தைச் சேர்ந்த டெக்ஸ் பேப் என்ஜினியர்ஸ் (இந்தியா) நிறுவனமும், பிரிண்டிங்கைப் பொறுத்தவரை கலர் ஜெட் இந்தியா நிறுவனமும், ஜவுளி எந்தி ரங்களுக்கான பிரிவில் லட்சுமி கார்டு குளோத்திங் மேனுபாக் சரிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன .

வகை – 2-ல் மாசுக்கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்திற்கான சிறப் பான செயல்பாட்டிற்காக மும்பையைச் சேர்ந்த எஸ். ஏ. பார்ம செம் பிரைவேட் லிமிடெட்டிற்கும், வகை – 3-ல் பெண்களுக்கான சிறப்பு விருது களில், பெண் தொழில் முனை வோருக்கான விருது, யாஷ்ரம் லைப்ஸ்டைல் பிராண்ட் நிறு வனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான தீபா ஏ. குமார், பெண்கள் அதிகா ரமளித்தல் பிரிவில், சர்லா பெர்பார்மன்ஸ் பைபர்ஸ் நிறு வனத்தின் இயக்குனர் நேஹா ஜுன்ஜுன்வாலா, தலை சிறந்த நெசவாளர் பிரிவில் சந்தோஷி கேவட், பாரம்பரிய ஜவுளிகளுக்கு புத்துயிர் அளித்தல் பிரிவில் குமாரி ரெய்தா ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.

வகை – 4-ல் சிறந்த ஆராய்ச்சி பிரிவில் மும்பை, சஸ்மிரா இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டாக் டர் ரேகா ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.

வகை – 5-ல் ஜவுளி மேஸ்ட்ரோ விருது பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வர்த்மான் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்பி ஓஸ்வாலுக்கு வழங்கப்பட உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img